ஆசை

1–2 minutes

read

தூரிகையில் வண்ணம் பூசி
காற்றில் வரைய ஆசை
கானல்  நீரில்
தாகம் தணிக்க ஆசை
காலை பணியில்
பயிர் வளர்க்க ஆசை
பட்டொளி வீசும் நிலவில்
கால்கள் பதிக்க ஆசை
ஆசைகள் எவையாயினும்
வேடம் கொண்டு வென்றிட ஆசையில்லை
தொலை தூர பயணத்தில் – ஆசைகளை
சீக்கிரம் அடைந்திட ஆசையில்லை
ஆழமாக யோசித்து பார்த்தால்
ஆசை கொள்வது எளிது – அவற்றை
வெல்லுவது எளிதல்ல

4 responses to “ஆசை”

  1. முடிவில் சரியாச் சொன்னீங்க… வாழ்த்துக்கள்…

    எதுவும் அளவோடு இருந்தால் சரி…!

    1. நன்றி திண்டுக்கல் தனபாலன் 🙂

  2. எல்லோருக்கும் உங்களைப்போலவே பல ஆசைகள் உண்டு பாலா.
    எவ்வளவு ஆசைகள் நிறைவேறும் என்பதே கேள்வி.
    நீங்கள் எழுதியிருப்பது போல ‘வேடம் கொண்டு வெல்ல’ நினைக்கக் கூடாது.

    நல்ல கவிதைக்கு பாராட்டுக்கள்!

    1. நன்றி அம்மா!

Leave a Reply to ranjani135Cancel reply

Discover more from Balachandar Kaliappan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading