வெளிநாடு

1–2 minutes

read

உணர்வுகள் அற்ற மனதோடு

உணர்ச்சிகள் அற்ற
மிருகங்களாக திரிகின்றோம்
உறவுகள் முறித்து இடம் பெயர்ந்தது
காசு பணம் பார்க்க
வெளிநாடு செல்கின்றோம்
கணிணியின் முன் கண்சிமிட்டி
பாச மொழி பேசுகின்றோம்
நாம்  இடம்  பெயர்ந்த நேரம் நம்
சந்ததிகள் தமிழ் மறக்கும்
தாய் தமிழ் மொழி
அதன் சுவடு இழக்கும் 
பாசம் பொழிந்த பூமி
கலை இழக்குதடா
உன் வரவை எண்ணி
சில உயிர் துடிக்குதடா !
வராவிட்டாலும் பரவா இல்லை தமிழா
நேசம் மறக்காதே, பாசம் மறக்காதே
தேசங்கள் செல்ல உதவிய
மொழி மறக்காதே!
– பாலச்சந்தர்

2 responses to “வெளிநாடு”

  1. சுதந்திரதினத்தன்று நான் மனம் நொந்து எழுதியதை அப்படியே கவிதையில் வடித்துவிட்டீர்கள் பாலா, பாராட்டுக்கள்!

    1. உங்கள் பதிவை இன்று தான் படித்தேன்! மிகவும் அருமை. பாராட்டியமைக்கு நன்றி அம்மா

Leave a Reply

Discover more from Balachandar Kaliappan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading